2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறுவோரின் வீடுகளை திருத்துவது தொடர்பில் ஆய்வு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 12 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

செழிப்பான இல்லம் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ், வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறுவோரின் வீடுகளை திருத்தம் செய்வது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம உத்தியோகஸ்தர் பிரிவு ரீதியாக விநியோகிக்கப்பட்டு, வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறுவோரிடமிருந்து தகவல்களை பூர்த்தி செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

இந்த விண்ணப்பப்படிவத்தில் பிரதான குடியிருப்பாளரின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், மாவட்டம், பிரதேச செயலகப்பிரிவு, கிராம உத்தியோகஸ்தர் பிரிவு, வாழ்வின் எழுச்சி நிவாரணத்தின் பெறுமதி, வதியும் வீடு உள்ளிட்ட  தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பப்படிவங்கள் மூலம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களினால்  தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X