2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காத்தான்குடி நகரசபையின் வரவு -செலவுத்திட்டத்துக்கு அங்கிகாரம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டக் கூட்டம்  நகரசபை சபா மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது, இந்த வரவு –செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், வரவு -செலவுத்திட்ட அறிக்கையை நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சபையில் முன்வைத்தபோது, இதனை சபை ஏகமனதாக அங்கிகரித்தது.

இந்த வரவு -செலவுத்திட்ட அறிக்கையில் திண்மக்கழிவு முகாமைத்துவம், சுகாதாரம், கல்வி அபிவிருத்தி, கர்ப்பிணிகளுக்கான  போஷாக்கு  உள்ளிட்டவைகள் உள்ளடக்கப்பட்டதுடன், திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகரசபை உறுப்பினர்களான எம்.அலி சப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X