2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நீரழிவு தினத்தை முன்னிட்டு பேரணி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்


உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இப்பேரணி வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமாகி வைத்தியசாலையை வந்தடைந்தது. இதன்போது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டதுடன்,  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  விழிப்புணர்வு வீதி நாடகமும் நடைபெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர் எம்.இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் தாதியர்கள், ஊழியர்கள், கிழக்கு பல்கலைக்கழக தாதிய மாணவர்கள்,  வைத்தியசாலையின் தாதிய மாணவர்கள் ஆகியோர் விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்கள் ஏற்பாடு செய்த பேரணி பிரதேச செயலகத்தை வந்தடைந்து.

இதேவேளை,  சர்வதேச நீரிழிவு தினத்தை  முன்னிட்டு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையால் ஒழுங்குசெய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஐ.எல்.இப்றாலெவ்வை தெரிவிக்கையில்,

'உலக சனத்தொகையில் 380 மில்லியன் பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 220 மில்லியன் பேர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளார்கள். ஆரோக்கியமான வாழ்வுக்கு  உணவுப்பழக்கவழக்கமே காரணம். காலை ஆகாரம் மிக பிரதானமானது. நார்த்தன்மையுள்ள 400 கிராமுக்கு  குறையாத மரக்கறிகள், பழங்கள், தவிடுள்ள சாதம் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும்  உட்கொள்ளுதல் வேண்டும்.  சிலர் இதைக் கவனத்தில் எடுப்பதில்லை. இது அபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும். ஒரு நாட்டின் அரசனைப் போல் காலை உணவை உட்கொள்ளவேண்டும்.

இலங்கையில் உள்ள வயோதிபர்களில் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். சரியான உணவுப்பழக்கவழக்கம் இன்மையால் ஏற்பட்ட நீரழிவு நோயின் செயற்பாடாகும். எனவே, இக்கொடிய நோயிலிருந்து பாதுகாக்க முன்னேற்றபாடான வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X