2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பொதுநோக்கு கட்டடத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டத்துக்கான உதவிச் செயற்றிட்டத்தின் அங்கமாக யு.என்.கபிராட் நிறுவனத்தால் கொக்கட்டிச்சோலை தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு  வழங்கப்பட்ட பொதுநோக்கு கட்டடத்; திறப்புவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

25 இலட்சத்து 20 ஆயிரம்  ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட  இப்பொதுநோக்கு கட்டட திறப்பு விழா, கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் க.இரத்தினகுமார் தலைமையில்  நடைபெற்றது.

இதன் மூலமாக 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளன.

இந்த நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம்,  ஐக்கிய நாடுகளின் கபிராட் நிறுவனத்தின் உதவி பொறியிலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X