2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாவரும் பேசலாம்

Sudharshini   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

பௌர்ணமி நிகழ்வின் ஐந்தாவது அமர்வாகிய யாவரும் பேசலாம் நிகழ்வு, மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன், மகுடம் கலை இலக்கிய வட்டத்தினர் நடத்திய இந்நிகழ்வு, பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரபல எழுத்தாளரும் கவிஞரும் புதுசு சஞ்சிகையின் இணை ஆசிரியருமான நா. சபேசனின் கலை உலக அனுபவங்களின் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றன.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கி;.துரைராஜசிங்கம், பேராசிரியர் சி. மௌனகுரு, பேராசிரியை சித்திலேகா மௌனகுரு, கவிஞர் வி. மைக்கல் கொலின், மட்டக்களப்பு தமிழ்ச்; சங்கத் தலைவர் எஸ்.எதிர்மன்னசிங்கம், காந்தி சேவா சங்கத் தலைவர் ஏ. செல்வேந்திரன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X