2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஏறாவூரில், டாக்டர் காமாக்ஷி நினைவு மருத்துவமனையின் தகவல் நிலையம்

Thipaan   / 2014 நவம்பர் 15 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இந்தியா, தமிழ்நாடு காமாக்ஷி நினைவு மருத்துவமனையின் தகவல் நிலையம் ஏறாவூரில் நேற்று(14) ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

ஏறாவூர் கோப் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இந்தத் தகவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கால் நடை விவசாய அபிவிருத்தி அமைச்சர் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில், இந்த தகவல் நிலையம் நிறந்து வைக்கப்பட்டது.

காமாக்ஷி நினைவு மருத்துவமனையின் பணிப்பாளர் அதன் தலைமை வைத்தியருமான ரீ.ஜீ. சிவரஞ்சனி, மருத்துவமனையின் துணை முதல்வர் வைத்தியர் லியோ வின்சன்ற், வைத்திய நிலையத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் மணவை அசோகன் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ், ஏறாவூர் கூட்டுறவுச் சபையின் பணிப்பாளர் எம்.எல். அப்துல் லத்தீப், தலைவர் எம். சக்கூர் உள்ளிட்டோரும் வைத்தியர்கள், சமூகத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டில் கடந்த பத்து வருடங்களாக இயங்கி வரும் இந்த காமாக்ஷி நினைவு மருத்துவமனையின் தகவல் மையங்கள், ஏற்கெனவே கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் உள்ளன.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக அதன் தகவல் மையம் ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மையத்தினூடக ஒவ்வொருவரின் நிலைமைகளையும் அறிந்து கொள்ளலாம். ஆனால், சிகிச்சைக்காக  தமிழ் நாடு டாக்கர் காமாக்ஷி நினைவு மருத்துவமனைக்குத்தான் வரவேண்டும் என காமாக்ஷி நினைவு மருத்துவமனையின் பணிப்பாளரும் தலைமை வைத்தியருமான ரீ.ஜீ. சிவரஞ்சனி தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X