2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மகளிர் அபிவிருத்தி சங்கங்களுக்கு நிதியுதவி

Kanagaraj   / 2014 நவம்பர் 15 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட மாதர் சங்கம் மற்றும் மகளிர் அபிவிருத்தி சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (14) கன்னங்குடா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

அத்துடன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிர்மல்ராஜ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.அரசகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது 31 சங்கங்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சம் வீதம் வழங்கிவைக்கப்பட்டு அதனை சங்க உறுப்பினர்களுக்கு ரூபாய் 10,000 படி 31 லட்சம் ரூபாய் பணம் பகிர்ந்து வழங்கிவைக்கப்பட்டது.

கிராமங்களில் வாழும் குடுமு;பங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை வடக்கு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாதர் சங்கங்களுக்கு இந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X