2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய அடையாள அட்டை தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டல்

Gavitha   / 2014 நவம்பர் 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

எதிர்காலத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நாடளாவிய தேர்தல்களின் போது, தனது ஆளடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தேவைப்பாட்டுக்காக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது தொடர்பாக, பொதுமக்களை அறிவூட்டும் வாரம் இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.

ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை இல்லையெனில் உங்கள் வசமுள்ள தேசிய அடையாள அட்டையின் குறிப்புக்கள் தெளிவில்லையெனில் புகைப்படம் இனங்காண முடியாதவாறு நிற மாறிருப்பின், கிராம சேவை அதிகாரியிடம் சென்று பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார கேட்டுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X