2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Kanagaraj   / 2014 நவம்பர் 15 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித் 

சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (பாம் பவுண்டேசன்) சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று (14) வெள்ளிக்கிழமை மாலை வாகரை - கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருச்செல்வம் ஜோய் கிறிஸ்டி தலைமையில் நடைபெற்றது.
வாகரைப் பிரதேசத்தில் பனிச்சங்கேணி வாவியை தமது ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற மக்களின் சமூக மட்டத் தலைவர்களுக்கான இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் 60 பேர் கலந்து கொண்டனர்.

கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுதல், வாவியில் சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்தல், தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிப்பதை முற்றாகத் தடை செய்தல், அத்தோடு வாவியை முகாமை செய்யக்கூடிய வகையிலான முகாமைத்துவக் குழுவை அமைப்பதற்கான முன்னோடிக் கருத்தரங்குகளை வாகரைப் பிரதேசத்தில் நடாத்தி வழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இக் கருத்தரங்கில் வாகரைப் பிரதேச சபையின் சார்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், முகாத்துவ உதவியாளர் எஸ்.ஜெயாபரன், கடற்றொழில் பரிசோதகர் ஏ.அரவிந்தன், கரையோரம் பேணல் திணைக்களத்தைச் சேர்ந்த பி.முகுந்தன், வாகரை பொலிஸ் நிலையத்தின் சார்பில் இந்திக, பிரதேசத்திற்கான கிராம சேவை உத்தியோகத்தர் டி.சுதாகரன், வேல்ட் விசன் நிறுவனத்தைச் சேர்ந்த திரு.செரோன் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X