2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய மரநடுகை நிகழ்வு

Sudharshini   / 2014 நவம்பர் 15 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்

தயட்ட செவன வேலைத்திட்டத்தின் கீழ், 'பசுமை நிறைந்த நாடு – ஒளிமயமான எதிர்காலம்' எனும் திட்டத்தில் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து, நாடு முழுவதும் மர நடுகை வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அதன் ஒருகட்டமாக, மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவும் இணைந்து, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் தேசிய மரநடுகை நிகழ்வினை நடத்தியது.

”நாட்டில் மர வளர்ப்பினை அதிகரிப்பதற்கான இலக்கினை வெற்றி கொள்வோம்” எனும் தொனிப்பொருளில் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.நெய்னா முஹம்மட் தலைமையில் சனிக்கிழமை (15) இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், ஓட்டமாவடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயிஸ், அல் கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.என்.எம்.பைசல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களுக்கு அதிதிகளால் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X