2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் தாய்லாந்துக்கு விஜயம்

Gavitha   / 2014 நவம்பர் 16 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்திய பெண்கள் மாhநாட்டில் கலந்து கொள்வதற்காக, காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களின் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான திருமதி. சல்மா ஹம்சா ஞாயிற்றுக்கிழமை (16) தாய்லாந்துக்கு பயணமானார்.

நாளை திங்கட்கிழமை (17) தொடக்கம் மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கான பங்குபற்றுதலை அதிகரித்தலும் பெண்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக மேம்படுத்தலும் என்னும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக, காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான திருமதி. சல்மா ஹம்சா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X