2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பரிசளிப்பு நிகழ்வு

Sudharshini   / 2014 நவம்பர் 16 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தர பாடசாலை மண்டபத்தில் கிழக்கு மாகாண அஞ்சல் மா பிரதி அதிபர் வி.விவேகானந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சல் அலுவலகங்கள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு சேவைகள் ஏற்படுத்தப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு அஞ்சல் அலுவலக உத்தியோகஸ்தர்களை ஊக்குவிப்பதற்காக இவ்வாறான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன என அஞ்சல் மா பிரதி அதிபர் இங்கு தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட தபால் திணைக்களங்களில் பணிபுரியும் ஊழியர்களின், தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தி பெற்ற 25 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தபாலகங்களில் சிறந்த சேவை செய்த பிரதான அஞ்சலதிபர்கள், பிராந்திய நிர்வாக அஞ்சல் அத்தியட்சகர்கள் உட்பட 65 ஊழியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அஞ்சலதிபர் டி.எல்.பி.ஆர். அபேரட்ண, கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வ. விவேகானந்தலிங்கம், பிராந்தியக் கணக்காளர் சந்திரகலா ஜெயேந்திரா கட்டுப்பாட்டாளர் (இயக்கம்) கே. கனகசுந்தரம் மற்றும் பிரதம அஞ்சலதிபர்கள் அதிதிகளாக காந்தி சதுக்கத்திலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X