2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய பிரஜை கைது

George   / 2014 நவம்பர் 16 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

விசா இல்லாமல் கடந்த இரண்டு வருடங்களாக மட்டக்களப்பில் வசித்து வந்த இந்திய பிரஜை ஒருவரை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, வவுணதீவு கண்ணங்குடா இலுப்பட்டிச்சேனையிலுள்ள வீடொன்றில் வைத்து, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தில்லியன்பழ சமதோஸ (வயது 22)  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், கடந்த இரண்டு வருடங்களாக விசா இல்லாமல் வசித்து வந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை, திங்கட்கிழமை (17) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் கூறினர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X