2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஓட்டமாவடி விபத்தில் ஒருவர் காயம்

George   / 2014 நவம்பர் 16 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில், ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(16) இரவு 07.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம், ஓட்டமாவடி பிரதான வீதி; ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டின் மீது மோதியதுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் துவிச்சக்கர வண்டி யொன்றும் சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜலால்தீன் (வயது – 48) என்பவரே காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

விபத்துச் சம்பவம் தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X