2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கான கிளினிக்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கான விசேட கிளினிக் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 09 மணியிலிருந்து  மாலை 06 மணிவரை நடைபெறவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப் பிரிவு வைத்திய அதிகாரி கே.ஜெயசுதன் தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 04ஆம் திகதிவரை தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சின் அழைப்புக்கு இணங்க, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர்  இந்தச் சிகிச்சையை நடத்தவுள்ளனர்.

உடம்பில் ஏற்பட்ட எரிகாயங்கள், உளத்தாக்கத்தால் உடலில் ஏற்பட்ட காயங்கள், பிளவுபட்ட உதடுகள், விகாரமடைந்த முகங்களை உடையவர்கள் இந்தச் சிகிச்சையைப் பெறமுடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X