2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  48 பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள்,  அப்பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (17) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் கூழாவடி மதுபானச்சாலையின் உரிமையாளர் ஒருவரால் கிராம அலுவலகர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவரது கமெரா மற்றும் கையடக்கத்தொலைபேசியும் சேதமாக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தை கண்டித்தும் அவருக்காக நியாயம்  வேண்டியும்  மேற்படி கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தங்களின் பிரிவுகளுக்கு சென்று கடமையாற்ற  அச்சமாக உள்ளது என்று  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவித்துவிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக மேற்படி கிராம அலுவலகர்கள் கூறினர்.

இருப்பினும்,  அத்தியாவசிய தேவை கருதி வருவோருக்கு  மட்டும்  கடமையாற்றுவதாகவும் இவர்கள் கூறினர்.

மேற்படி கிராம அலுவலகர்களின் பணிப்புறக்கணிப்புக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X