2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உக்காத கழிவுகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 17 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை பிரிவில் சேகரிக்கப்படும் பொலித்தீன்  மற்றும் பிளாஸ்டிக் போன்ற உக்காத கழிவுகளை பணம் கொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கையை  அந்நகரசபை எடுத்துள்ளதாக  நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபையின் சுகாதார ஊழியர்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் குப்பைகள் சேகரிப்பு தொடர்பில்  விளக்கமளிக்கும் கூட்டம் நகரசபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (17)  நடைபெற்றது. இதன்போதே அவர் இதைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'காத்தான்குடி நகரசபைப் பிரிவில் வீடுகள், வியாபார நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் குப்பைகளை சேகரிக்கும்போது உக்கும், உக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து சேகரிக்கவேண்டும்.

வாரத்தில் உக்கும் குப்பைகள் நான்கு தினங்களிலும் உக்காத குப்பைகள் ஒரு தினத்திலும் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இதை இன்னும் துரிதப்படுத்தவேண்டும்.

அதேபோன்று, காத்தான்குடி நகரசபை சுகாதார ஊழியர்களால் சேகரித்து கொண்டுவரப்படும்  பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போன்ற உக்காத கழிவுகளை பணம் கொடுத்து காத்தான்குடி நகரசபை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

நான் காத்தான்குடி நகரசபைத் தலைவராக இருக்கும் காலத்திலேயே இந்தக் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். இதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டு, நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

இதற்காக காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு, திண்;மக்கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கும் குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

இதில் காத்தான்குடி நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்' எனக் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X