2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69ஆவது பிறந்ததினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரிய நாட்டு வைத்தியர்களைக் கொண்ட வைத்தியமுகாம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நாளை புதன்கிழமைவரை நடைபெறவுள்ளது.

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத்தினால்; இந்த வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வைத்திய முகாம் ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலை, மற்றும் புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பசீர் சேகுதாவூதின் மக்கள் தொடர்பு அதிகாரி யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

கொரிய சர்வதேச கூட்டுத்தாபன ஒன்றியம், கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடத்தப்படும் இந்த வைத்திய முகாமின் பிரதான வைபவம் புதன்கிழமை காலை 8 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்ப ஆயுர்வேத வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

இதில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் பசீர் சேகுதாவூதின் மக்கள் தொடர்பு அதிகாரி யு.எல்.எம்.என்.முபீன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X