2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுச்சூழல் சுத்தம் தொடர்பில் அவதானிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்

'பிரதேசத்தின் சுத்தம்' என்ற தொனிப்பொருளில் ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை போன்ற கிராமங்களில் அமைந்துள்ள வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்டவற்றின் சுற்றுச்சூழல்  சுத்தம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (17) பார்வையிடப்பட்டதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார், இராணுவத்தினர், ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், மீராவோடை வைத்தியசாலை ஊழியர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள், மருத்துவ மாது மற்றும் மேற்பார்வை தாதிய சகோதரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை ஆகிய பிரதேசங்களில் 925 வீடுகளினதும் இரண்டு பாடசாலைகளினதும் சுற்றுச்சூழலில் உள்ள சுத்தம் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டதுடன், 16  வீட்டு உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X