2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாழ்வின் எழுச்சிப் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'செழிப்பான இல்லம் வளமான தாயகம்' எனும் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப்பற்று வடக்கு வந்தாறுமூலையில் 4,552  பயனாளிகளுக்கு 2,500 ரூபாய் படி கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை  இன்று செவ்வாய்க்கிழமை (18)  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 'வாழ்வின் எழுச்சி' சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தின் ஊடாக இந்தக்  கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க முகாமையாளர் கே. விநோதினி தெரிவித்தார்.

வந்தாறுமூலைக் கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வந்தாறுமூலை கிளைத் தலைவர் பி.நந்தகுமார்,  வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தின் முகாமையாளர் கே.விநோதினி, வாழ்வின் எழுச்சி உத்தியோகஸ்தர் கே.அருளானந்தன், சித்தாண்டி முகாம் பொறுப்பதிகாரி கேர்ணல் ஜிஹான் பரவிதான உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்ததினத்தைச் சிறப்பிக்கும் முகமாக  இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X