2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'அபிவிருத்தியூடாகவே உரிமைகளை வென்றெடுக்கமுடியும்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 19 , மு.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம், சத்தியாக்கிரகம் போன்ற வழிவகைகளை மேற்கொண்டுவருகின்றன. இவற்றை விட,  தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடியும் இதுவரையில் உரிமை கிடைக்கவில்லை என்றால் என்ன காரணம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி கிராமத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளை செவ்வாய்க்கிழமை (18) திறந்துவைக்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'அப்போதைய காலகட்டத்தில் என்னுடைய அப்பப்பா தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்து பல சத்தியாக்கிரக போராட்டங்களை நடத்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடியிருந்தார். அது அப்பேதைய காலகட்டத்துக்கு பொருந்தும். ஆனால், தற்போதைய காலகட்டத்துக்கு  இவ்வாறான சத்தியாக்கிரகப் போராட்டங்கள்  பொருந்தாது. 

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியூடாக அவர்;களது உரிமையை பெற்றெடுப்பதற்கு வழி பிறந்துள்ளது. அதுவே அபிவிருத்தியூடாக உரிமைகளை பெறுவதாகும்.

எமது தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம், சத்தியாக்கிரகம் போன்ற வழிவகைகளை மேற்கொண்டுவருகின்றது. இவற்றை விட, தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடியும் இதுவரையில் உரிமை கிடைக்கவில்லை என்றால் என்ன காரணம்? என்னைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆளும் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து, எமது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் அபிவிருத்தியூடாகவே எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கமுடியும். 

இதற்காக வேண்டி தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்கின்ற அமைப்பை  நான் பயன்படுத்துகின்றேன். இந்தக் கட்சியிலிருந்துகொண்டு எமது தமிழ் மக்களின் அபிவிருத்திகளை மேற்கொண்டுவருகின்றேன். 

எமது மக்கள் கடந்தகாலங்களில் பொருளாதார ரீதியான பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள். எனவே தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும்.

தற்போது இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆளும் கட்சியாக இருக்கின்றது. எமது மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆதரித்தால்,  மென்மேலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும்.  சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு, அவர்களது சமூகம் சார்ந்து குரல் கொடுத்துவருகின்றார்கள்.

அதுபோல், எமது தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெறவேண்டும். அப்போதே  எமது தமிழ் மக்களின் உரிமைகள், அபிவிருத்திகள் பற்றி அரசாங்கத்திடம் உரிமையோடு கேட்டுப் பெறலாம்.

தற்போது நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதியின் அமைப்பாளராக இருந்துகொண்டு இந்தத் தொகுதியில் கடந்த ஒருமாத காலத்தினுள்; 3 கோடி ரூபாய் செலவில் வீதி அமைத்தல், தென்னங்கன்றுகள் வழங்குதல், கணினிகள்; வழங்குதல் போன்ற பல அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன். இதுபோன்ற மேலும் பல அபிவிருத்தித்திட்டங்களும் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, இறால் வளர்ப்பு போன்ற பல வாழ்வாதாரத் திட்டங்களையும் எதிர்காலத்தில் அமுல்படுத்தவுள்ளேன். 

இந்த நிலையில் நான் ஒரு எதிர்க்கட்சியின் அமைப்பாளராக இருந்திருந்தால், என்னால் எதுவித அபிவிருத்திகைளயும் மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும்.

எமது தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவேண்டும். நாங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை மக்கள் மத்தியில் செய்தால், மக்களிடம்; பொருளாதார மாற்றங்கள் தானாகவே வந்துசேரும். பின்னர் தொடர்ச்சியாக எமது உரிமைகiளும் வந்துசேரும். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளால் எதுவும் செய்யமுடியது. அவர்களால் வெறும் அறிக்கைகளை மாத்திரமே விடமுடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பட்டிருப்புத்தொகுதியில் உள்ள 110 கிராமங்களிலிருந்தும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த வாக்குகள் சுமார் 1,300.   எனவே, பட்டிருப்புத்தொகுதியில் 87,000 இற்கும் மேல் வாக்காளர்கள் உள்ளார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் கடந்த தேர்தலில் செயற்பட்டது போன்று இல்லாமல், பட்டிருப்புத்தொகுதியிலுள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கி எமது மக்களின் அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவ வேண்டும். 

தமிழ் மக்களின் தேவைகள் பல இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமலிருக்கின்றன. அந்தத் தேவைகளை அரசாங்கத்திடமிருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும். மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரப்போகின்றவர் மஹிந்த ராஜபக்ஷவே. எமது மக்களின் அபிவிருத்திகளை மேலும் விருத்தியடையச் செய்வதற்;கு ஆளும் கட்சியை ஆதரிக்க வேண்டும்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X