2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பத்து பேருக்கு நியமனக்கடிதங்கள்

Gavitha   / 2014 நவம்பர் 19 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களைச் சேர்ந்த பத்து பேருக்கு, பாடசாலை காவலாளிகள் நியமனங்கள் செவ்வாக்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள காவலாளிகள் வெற்றிடத்தை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைரின் சிபார்சின் கீழு; இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைரின் காரியாலயத்தில் வைத்து இந்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்நியமனக் கடிதங்களை தேசிய காங்கிரஸின் மாவட்ட செயலாளரும் ஏறாவூர் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம்.நஸீர்;, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அதிபரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் கிளை மசூறா குழுத்தலைவருமான ஏ.எம்.தௌபீக் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இவ்வாறு நியமனம் பெற்றுள்ள பாடசாலை காவலாளிகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாகாணப்பாடசாலைகளில் காவலாளிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X