2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மின்னல் தாக்கியதால் காவலாளி காயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 19 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராம அலுவலகர்  பிரிவில் கொண்டயன்கேணி மர்ஹூம் அஸ்ரப் நகரில் மின்னல் தாக்கியதால், தென்னந்தோப்புக் காவலாளியான கொண்டயன்கேணியைச் சேர்ந்த மூத்த தம்பி தம்பி ராசா (வயது 72)  ஒருவர் காயமடைந்துள்ளார். 

நேற்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது,  தென்னந்தோப்பிலுள்ள வீட்டுக்கூரையும் சேதமடைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதுடன், கடுமையான இடி, மின்னல் தாக்கமும் காணப்படுகின்றது.

தோட்டக்காவலாளி உறக்கத்திலிருந்தபோது, பாரிய சத்தத்துடன் வீட்டின் மீது  ஏதோவொன்று விழுவது போன்றிருந்தது. எழுந்துவந்து பார்த்தபோது   வீட்டுக்கூரை சேதமடைந்து காணப்பட்டது. இவ்வேளையில், தனது முதுகில் நெருப்பால் சுட்டது போன்று காயம் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட காவலாளி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தியதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மேற்படி தென்னந்தோட்ட உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X