2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்தை தவிர்க்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 19 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் பதிலீடு இன்றி எந்தவொரு ஆசிரியருக்கும் இடமாற்றம் வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரி, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அஹமட் லெப்பைக்கு  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள்; சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,  செயலாளர் அஸ்ஸெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி ஆகியோர் கையொப்பமிட்டு செவ்வாய்க்கிழமை (18) இக்கடிதம்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக தங்களது பணிவான கவனத்தை இங்கு ஈர்க்க விரும்புகிறோம்.
மட்டக்களப்பு மத்தி வலயத்தில் கணிசமான பாடசாலைகளைக் கொண்ட எமது காத்தான்குடி கோட்டத்தில், அதிகமான ஆசிரியர்கள் இந்த வருட இறுதியில் இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளதாக அறிகிறோம். இவ்வாறு பதிலீடு இன்றி மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள், மாணவர்களின் கல்வியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் கருதுகிறோம்.

எனவே, எமது பிரதேச மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பதிலீடு இன்றி எந்தவொரு ஆசிரியருக்கும் இடமாற்றம் வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X