2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நியமிக்கப்பட்ட காவலாளி வேண்டாமெனக் கூறி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 19 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்கு உட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்துக்கு  நியமிக்கப்பட்ட காவலாளியை,  பாடசாலையினுள் உள்நுழையவிடாது தடுத்து புதன்கிழமை (19) அக்கிராமவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிழக்கு மாகாணசபையால் செவ்வாய்க்கிழமை (18) வழங்கப்பட்ட நியமனத்தின்; கீழ், ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்துக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு நியமனம் வழங்கியதைக்; கண்டித்தும்  தங்களது பிரதேசத்தை  சேர்ந்த ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தியதுடன்,  கடமைக்கு வந்த மேற்படி காவாலளியை  தடுத்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

'இந்தப் பாடசாலைக்கு காவலாளி மற்றும் பாடசாலை சிற்றூழியர்களை நியமிக்குமாறு கோரி, இருவரின் பெயர்களை  அதிபர் ஊடாக பரிந்துரைத்து,  கிழக்கு மாகாணசபைக்கு கடந்தகாலத்தில்  அனுப்பிவைத்தோம். 

இது தொடர்பில் எந்தவித பதிலும் இதுவரையில் எமக்கு வழங்கப்படாத நிலையில், ஏறாவூரைச் சேர்ந்த ஒருவரை இந்தப்  பாடசாலைக்கு காவலாளியாக நியமித்துள்ளனர்.

இந்தப்  பாடசாலைக்கு எமது பகுதியைச் சேர்ந்த ஒருவரையே காவலாளியாக நியமிக்கவேண்டும். அதுவரையில் இவ்வாறான நியமனங்கள் பெற்றுவருவோரை பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம்' எனக் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X