2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பயிற்சி

Sudharshini   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கி வரும், சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவுகளின் பொறிமுறைகளையும் சேவைகளையும்; வலுப்படுத்தும் வகையில் பயிற்சி செயற்திட்டமொன்று செவ்வாக்கிழமை (18) மட்டக்களப்பில் நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி அசோக அலவத்த தலைமையில் றடைபெற்ற இப்பயிற்சியில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்;, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன.

சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் மற்றும் மாவட்ட ரீதியாக சிறுவர்கள், பெண்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில், இதன் போது கேட்டறியப்பட்டது.

 மேலும், இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, இந்நிருவனத்துடன் தொடர்புப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி, ஒன்றிணைக்கப்பட்ட சேவையை வழங்குவது தொடர்பில், உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், இப்பயிற்சி நெறி நடத்தப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவுளுக்கு கதிரை, மேசை, கணிகள் என்பனவும் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர் திருமதி ஏ.அருணாழினி,முன்பள்ளிப் பருவ இணைப்பாளர் வி.முரளிதரன், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் வி.குகதாசன், தேசிய பாதுகாப்பு அதிகாரசபை கண்காணிப்பு உத்தியோகஸ்தர் திருமதி நிசா றியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X