2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சகோதர பாலம்

Gavitha   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


களனிப்பல்கலைக் கழக வைத்திய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'சகோதர பாலம்' எனும் பொதுமக்களுக்கான சுகாதார விழிப்புணர்வுக் கருத்தரங்கும் கண்காட்சியும் புதன்கிழமை (19) மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மாவட்ட வைத்திய அதிகாரி ரீ. தவநேசன் தலைமையில், காலை ஆரம்பமான படுவான்கரை மக்களுக்கான சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பிரதேச பாடசாலைகளின் மாணவர்களும் என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றதாக களனிப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் களனிப் பல்கலைக் கழகத்தின் பொதுச் சௌக்கியத் திணைக்களப் பணிப்பாளருமான வைத்தியர் மாதவ சந்திரதிலக தெரிவித்தார்.

குடிபோதை பாதிப்புக்கள், மந்த போஷனை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் பற்றிய கண்காட்சியும் விளக்கக் கருத்தரங்கும் இந்நிகழ்வின் போது இடம்பெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X