2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காத்தான்குடி நகரசபைக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

திண்மக்கழிவு முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் குப்பைகளை சேகரிப்பதற்காக  சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று வாகனங்களை காத்தான்குடி நகரசபைக்கு யுனெப்ஸ் நிறுவனம் புதன்கிழமை (19) வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த வாகனங்கள் காத்தான்குடி நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளர்களிடம் நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர்  கையளித்தார்.

இதன்போது காத்தான்குடி நகரசபையின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாட், எம்.அலி சப்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வாகனங்கள் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் குப்பைகளை இலகுவாக சேகரிப்பதற்கும்; திண்மக்கழிவு முகாமைத்துவத்துகு;கும் பயன்படுத்தவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
 

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X