2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. சிவில் சமூக அமைப்பின் தலைவராக மீண்டும் மாமங்கராசா

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவராக மீண்டும் எஸ்.மாமங்கராசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் மூன்றாவது வருடாந்த பொதுக்கூட்டமும் 2014ஆம்  2015ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகத்தெரிவும் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் புதன்கிழமை (19) நடைபெற்றது. இதன்போதே, அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த அமைப்பின்  செயலாளராக ரி.வசந்தராசா, உபதலைவர்களாக கே.எம்.எம்.கலீல் ஹாஜியார், சட்டத்தரணி ஆர்.கண்ணன், உதவிச் செயலாளராக திருமதி எஸ்.கிருபாகரன், பொருளாளராக எஸ்.சோமசுந்தரம், திட்ட இணைப்பாளராக கலாநிதி எம்.பிறேம்குமார் மற்றும் ஆலோசகர்களாக அருட்தந்தை டி.சுவாமிநாதன், அருட்தந்தை கலாநிதி ஜே.எப்.ராஜேந்திரா ஆகியோர் உட்பட 17 பேர் கொண்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த அமைப்பின் போசகராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த மூன்று வருடங்களாக மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு இந்த மாவட்டத்தில் பல்வேறு சிவில் சமூகப்பணிகளை மேற்கொள்வதுடன்,  மட்டக்களப்பிலுள்ள கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், அரச உயர் அதிகாரிகள், மதத்தலைவர்களை  உள்ளடக்கி செயற்பட்டு வருகின்றது.
இந்தக் கூட்டத்தின்போது, மட்டக்களப்பின் சிரேஷ்ட பிரஜையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான ரி.அருணகிரிநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X