2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பால் அருந்திய இரு சிறுவர்களுக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மளிகைக்கடையொன்றிலிருந்து பைக்கட்டில் அடைக்கப்பட்ட பாலை வாங்கி அருந்திய மூன்று வயதுச் சிறுமியும் ஒரு வயதுச் சிறுவனும் ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (20) சிகிச்சை பெற்றதாக  மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்.தேவநேசன் தெரிவித்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சற்று மயக்கமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில்  வைத்தியசாலை நிர்வாகத்தினர் தனக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த கடைக்குச் சென்று ஏனைய பால் பைக்கட்டுக்களை பார்வையிட்டபோது, காலாவதியாகும் திகதி 21.05.2015வரை எனக்  குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும்,  மேற்படி பால் பைக்கட்டுக்கள் ஊதிப் பருத்து காணப்பட்ட  நிலையில் 40 பால் பைக்கட்டுக்களை  அங்கிருந்து  கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X