2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதி நாடகம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

அரச சேவைகளில்; பொதுமக்கள்  அன்றாடம் எதிர்கொள்ளும் தேவைகள், சவால்கள், சிக்கல்கள், தடைகள், தாமதங்கள் தொடர்பில்   மக்களின்  மனக்குறைகளை உரிய அரச அதிகாரிகளுக்கு உரிய முறையில் உடனடியாக  முறையிடும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் முகமாக நேர்மையின் புகலிடம் அமைப்பு முனைக்காடு நாகசக்தி கலைக்கழகத்துடன் இணைந்து வீதி நாடகத்தை மட்டக்களப்பின் பல பாகங்களிலும் நடத்திவருகிறது.

இதன் ஓரங்கமாக வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு உள்ளூராட்சிமன்ற பிரதி ஆணையாளரின் அலுவலகத்திலும் அதனை தொடர்ந்து மட்டக்களப்பு பேரூந்து நிலையத்திலும் வீதி நாடகம் நடைபெற்றது.

நாடகத்தின் இறுதியில், புகார் செய்ய மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கையேடுகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X