2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காட்டு யானை தாக்கி, பெண் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி - இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி பெண்ணெருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை 6.30 மணியளவில்  தனது வீட்டிலிருந்து தும்பங்கேணி - இளைஞர் விவசாயத்திட்ட கிராமத்திலுள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேளையில், வீதியருகில் மறைவாக நின்ற காட்டு யானை இக்குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் படுகாயமடைந்தவர் செல்லத்துரை தங்கம்மா வயது 56 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான குறித்த பெண், கால் ஒன்று உடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலை நிருவாகத்தினர் கூறினர்.


இதேவேளை, நேற்று (21) அதிகாலை பனிச்சையடி முன்மாரி கிராமத்தினுள் புகுந்த 4 காட்டு யானைகள், அக்கிராமத்திலிருந்த 2 ஏக்கர் மரவள்ளி தோட்டம் ஒன்றினை முற்றாக அழித்துள்ளதாகவும் அக்கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X