2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மழை காரணமாக கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழை காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படகின்றது. இதனால் தாம் கடற்றொழிலுக்கு செல்லாமலும் பாரிய அலைகளால் தங்களது உடமைகள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டள்ளதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவிப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார்.

கடல் கொந்தளிப்பான இக்காலநிலையில், ஆரையம்பதியில் ரூபாய் 3.8 மில்லியன் மற்றும் வாழைச்சேனையில் ரூபாய் 1.6 மில்லியன் பெறுமதியான படகும் வலைகளும் சேதமடைந்திருப்பதாக, இதுவரையில் பதியப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடலுக்குச் செல்லாமல் வாடியில் தங்கியிருந்து, சேதமடைந்த வலைகளைத்; திருத்தியும் மற்றும் புதிய வலைகளைப் பின்னுகின்றோம்.
ஓவ்வோரு நாளும் கடற்றொழிலை நம்பி வாழும் எங்களது குடும்பத்தின் ஜீவனோபாயம் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளது.

இதேவேளை, மாவட்ட கடற்றொழில் திணைக்களமோ அல்லது வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ எங்களுக்கு எதுவிதமான உதவிகளையும் செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மற்றும் வாவித் தொழிலை நம்பி 23,832 குடும்பங்கள் உள்ள நிலையில், கடற்றொழிலில் 13,872 மீனவர்கள் ஈடுபட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X