2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு முகத்துவாரத்தை வெட்டிவிடுமாறு உத்தரவு

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்.எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பிலுள்ள வாவிகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், உடனடியாக மட்டக்களப்பு முகவத்துவாரத்தை வெட்டிவிடுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சனிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

இதனால், வாவியில் நீர் நிரம்பி வீதிகளுக்கு வெள்ள நீர் வரும் நிலை ஏற்படும் என்பனதால் உடனடியாக மட்டக்களப்பு முகவத்துவாரத்தை வெட்டி நீரை கடலுக்கு ஓடச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி வாவியின் நீர் உயர்ந்துள்ளதால், மட்டக்களப்பு லேடி மெனிங் ட்றைவ் வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வீதியில் பயணிப்போர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மட்டக்களப்பு முகவத்துவாரம் வெட்டப்படுமானால், வாவிகளின் நீர் மட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X