2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மின்சார சபை ஊழியரை நிரந்தரமாக்குமாறு கோரி பொதுக்கூட்டம்

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை உடனடியாக நிரந்தமாக்குமாறு கோரி, இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் கிழக்கு மாகாணம் தழுவிய பொதுக் கூட்டம் சனிக்கிழமை (22) மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் உப தலைவர் இந்திக விஜேரட்ன, கிழக்கு மாகாண இணைப்பாளர் ஆரிய பிரியங்க உட்பட அதன் நிருவாகிகள் முக்கியஸ்தர்கள், மாவட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை உடனடியாக நிரந்தமாக்குமாறு, ஒன்றுபட்டு கைகளை உயர்த்தி கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இது தொடர்பாக எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் கூட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் இருந்தும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் கலந்து கொள்வதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையில், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை உடனடியாக நிரந்தமாக்குமாறு கோரி, இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தினால், தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அதற்கான கூட்டங்கள் மாகாண ரீதியாக நடாத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X