2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகின்றது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 23 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வடிந்துவருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்;றுக்கிழமை காலை மழை ஓய்ந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழையால் சனிக்கிழமை (22) மட்டக்களப்பிலுள்ள வாவிகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளநீர் மட்டக்களப்பு நகரில்; வாவிகளை அண்மித்த வீதிகள் மற்றும் வீடுகளில் பரவியது.

இதையடுத்து மட்டக்களப்பு முகத்துவாரத்தை வெட்டிவிடுமாறு  வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன் உள்ளிட்டோர் முகத்துவாரம் பகுதிக்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர். இதன் பின்னர்,  முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் கடலுக்கு ஓட ஆரம்பித்ததது. இந்த நிலையில், வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். 

கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 98 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்த மழையால்,  படுவான்கரையில் பல கிராமங்களும் வயல்களும் வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் வெள்ளநீர் ஊடறுத்துள்ளது. அந்த வகையில், பண்டாரியாவெளி கிராமத்தினுள் வெள்ளநீர் உட்புகுந்ததால், அக்கிராமம் முற்றாக  பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டூர் -வெல்லாவெளி வீதி, பெரியபோரதீவு -பழுகாமம் வீதி, அப்பிளாந்துறை-தாந்தாமலை வீதி, மண்முனை-மகிழடித்தீவு வீதி போன்றவற்றில் வெள்ள நீர் ஊடறுத்துச் செல்வதால், இவ்வீதிகளில் மக்கள் போகுவரத்துச் செய்வதில் பலத்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X