2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 23 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை மத்தி பிரிவுக்குரிய சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (23) களுதாவளை மத்தி பொதுக்கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது மக்கள் மத்தியில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது, சிவில் பாதுகாப்புக்குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் காணப்படும் அந்நியோன்னிய உறவு, மக்களை எவ்வாறு சிவில் பாதுகாப்புக்குழு கையாளுதல், பிரச்சினைகள் வராமல் எவ்வாறு தடுத்தல் போன்ற பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால், கிராம சேவை உத்தியோகஸ்தர் ச.தனலெட்சுமிமி, சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள்  கலந்துகொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X