2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வட்டவான் வீட்டுத்திட்டத்தை ஓஸ்ரியாவின் உதவு நிறுவனப் பிரதிநிதிகள் பார்வை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவான் சமாதான கிராமத்தின் 199 சுனாமி நிரந்தர வீட்டுத்திட்டத்தை ஓஸ்;ரியா (யுரளவசயை) நாட்டின் உதவு நிறுவனப் பிரதிநிதிகளைக் கொண்ட  குழுவினர்  ஞாயிற்றுக்கிழமை (23) பார்வையிட்டனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வட்டவான் கிராமம் சமாதான கிராமமாக சர்வோதய நிறுவனத்தால் தெரிவுசெய்யப்பட்டு, அங்கு தலா 10 இலட்சம் ரூபாய் செலவில் 199 வீடுகள் 2008ஆம் ஆண்டு அமைத்துக் கொடுக்கப்பட்டன.

ஓஸ்ரியா நாட்டின் உதவு நிறுவனப் பிரதிநிதிகள் குழுவினரே இந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தனர்.

ஒஸ்ரியா நாட்டிலுள்ள கூரியர் உதவி  எனும் பத்திரிகையொன்றின் வாசகர்கள் ஊடாகத் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு இந்த வீடமைப்புத்திட்டம் நிறைவுசெய்யப்பட்டது.

இந்த வீடுகளின் தராதரங்களை மதிப்பீடு செய்வதற்காகவும் வீட்டு உரிமையாளர்களின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக கேட்டறிவதற்காகவும் இந்த விஜயத்தை தாங்கள் மேற்கொண்டதாக கூரியர் உதவி  பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பீற்றர் ரபிள்  தெரிவித்தார்.

இன்றைய கிராம வீட்டுத்திட்ட பார்வையிடலில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, சர்வோதய நிலையத்தின் பிராந்திய இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம், மாவட்ட இணைப்பாளர் எஸ்.மதனகுமார், கூரியர் உதவி  பத்திரிகை நிறுவனத்தின் அதிகாரி மக்ஸ் சான்ற்னர் உள்ளிட்ட அதிகாரிகளும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X