2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'வறுமை, யுத்தத்தை காரணங்காட்டி பிள்ளைகளின் எதிர்காலம் தொலைய இடமளிக்கக்கூடாது'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 24 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

வறுமையையும் யுத்தத்தையும்  காரணம் காட்டிக்கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை தொலைப்பதற்கு  இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாகரைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான விஷேட கூட்டம் வாகரை மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (23)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் காலத்தை செலவளிப்பதை விடுத்து, பெண் பிள்ளைகளின் மீது பெற்றோர்; அக்கறை காட்டவேண்டும். வெறுமனே பிள்ளைகள் மீது அன்பு காட்டுவதால் மாத்திரம், நல்லொழுக்கமுடைய  மாணவர்களை உருவாக்கமுடியாது.

பாடசாலை சென்று வீடு திரும்பும் பிள்ளையின் கொப்பிகளை பெற்றோர் பார்வையிடவேண்டும். அன்றைய பாடசாலை செயற்பாடு தொடர்பாக கலந்துரையாடவேண்டும். கையடக்கத்தொலைபேசிகளை சிறுபருவத்தில் வாங்கிக்கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.

மேலும், வாகரையிலிருந்து  அரச அதிகாரிகள் உருவாக்கப்படவேண்டும். அதற்குரிய  உட்கட்டமைப்பு வசதிகளை நான் செய்து தருவதற்கு தயாரக உள்ளேன்' எனக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன். வாகரை கிராம சேவையாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X