2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை கிளினிக் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 24 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கான விசேட கிளினிக்  திங்கட்கிழமை (24) காலை  ஆரம்பமாகியுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளைச் சேர்ந்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை அமைப்பான இன்ட பிளாஸ்ட் அமைப்பு, இலங்கை சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சைப்பிரிவின் ஏற்பாட்டில், இந்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைக்கான கிளினிக்கை நடத்துகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவு பொறுப்பதிகாரி, பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் எச்.ஏ.எஸ்.ரத்நாயக்கவின் ஒருங்கிணைப்பில் இந்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை கிளினிக் நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் திருமதி சாந்தினி பெரேரா,  அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து  நாடுகளைச் சேர்ந்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை அமைப்பான இன்ட பிளாஸ்ட் அமைப்பின் வைத்தியர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முகாம் மூன்று வாரங்களுக்கு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெறும் என்று  அவ்வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் கே.ஜெயசுதன் தெரிவித்தார்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X