2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசரக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 24 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான  நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுத்துள்ள நிலையில், இது தொடர்பான  அவசர குழுக்கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்றது.

தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால்,  எதிர்பார்க்கப்படும் வெள்ளம் மற்றும் கடும் காற்று அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்படவேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
 
அவசரகால நிலைமையின்போது, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தயாராகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்
மட்டக்களப்பு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி ஏ.எம்.எம்.ஹஸீர், பிரதேச செயலர் எஸ.;எல்.எம்.ஹனிபா, பிரதேச பொதுநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X