2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் சமூகம் தர்க்கித்து பிளவுபடக்கூடாது: சிப்லி பாறூக்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 24 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் தர்க்கித்து பிளவுபட்டு விடக்கூடாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறும் பயனாளிகள், வீடுகளை  திருத்துவதற்கான மானியம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்தக்கூடாது.  எங்களுடைய தலைமைத்துவம் எங்களுக்கு எதைச் செய்ய காத்திருக்கின்றது. எந்தத் தீர்மானத்தை நாம்; எடுத்தால், முஸ்லிம் சமூகத்துக்கு பாதுகாப்பு இருக்கின்றது. முஸ்லிம் சமூகம் எவ்வாறு இன்றைய சூழ்நிலையில் நடக்கவேண்டும் போன்ற விடயங்களை எமது முஸ்லிம் தலைமைகள் அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுத்த பின்னரே தேர்தல் களத்தில் நிற்பார்கள்.

வீணாக நாங்கள் தர்க்கித்து, சண்டையிட்டு முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தத் தேவையில்லை.

தேர்தல் வந்துவிட்டால் எமது மக்களை பிழையாக வழிநடத்தி, மக்களை வேறு  திசைக்கு திருப்பி, பின்னர் மக்களை பாதியில் விட்டுச் செல்கின்ற சக்திகளை ஆதரித்தால், எதிர்காலத்தில் இந்த முஸ்லிம் சமூகம் தட்டுத்தடுமாறி திரிகின்ற ஒரு சமூகமாக மாறிவிடும்.

தேர்தலை எமது சமூகத்துக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்தல் காலங்களில் உத்தரவாதங்களை கொடுத்துவிட்டு, தேர்தல் காலம் முடிந்த பின்னர் எங்கோ மறைந்துவிடுவார்கள். பின்னர் இன்னுமொரு தேர்தலிலேயே சந்திப்பார்கள். அப்படியானவர்களின் பின்னால் சென்றுவிடக்கூடாது என்று உங்களை கேட்க விரும்புகின்றோம்.

சமூகத்தை ஏமாற்றி சமூகத்தின் வாக்குகளை பெற்று  சமூகத்தை நட்டாற்றில் விட்டுச்செல்லும் தலைமைத்துவத்துக்கு  பின்னால் நாங்கள் செல்லக்கூடாது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X