2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாமாங்கேஸ்வரர் கோவிலில் திருட முற்பட்டவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 25 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்களை திங்கட்கிழமை (24) அதிகாலை  உடைத்து பணம் திருடிக்கொண்டிருந்தபோது, சந்தேக நபர்  ஒருவரை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கோவிலுக்கு முன்பாகவுள்ள  குறிப்புப் புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கு வந்த பொலிஸாருக்கு,  கோவிலின உட்புறத்திலிருந்து சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து,  முன்கதவை உடைத்துப் பார்த்தபோது, ஒருவர் உண்டியலிருந்து பணம் திருடிக்கொண்டிருந்தமை தெரியவந்தது. இந்த நிலையிலேயே இவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், இந்தச் சந்தேக நபர் கோவில் காவலாளியாக கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X