2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீதிகளில் நடமாடிய கட்டாக்காலி மாடுகளை அக்கரைப்பற்று பொலிஸார்;   திங்கட்கிழமை (24) இரவு பிடித்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயிலின் வழிகாட்டலின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும் இவ்வாறு விலங்குகளை வீதிகளில் வீடுவோர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரி எம்.ஏ.எம்.றமீஸ் தெரிவித்தார்.

பிடிக்கப்பட்டுள்ள கட்டாக்காலிகள் தொடர்பில் பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X