2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிரான்-தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில்; படகுச் சேவை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 25 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்-தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில்இ அங்கு இயந்திர படகுச் சேவையைஇ இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

கிரான் தொடக்கம் புலிபாய்ந்தகல் பிரதேசம் வரை சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்துக்கு  இந்த படகுச்சேவை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இதற்காக  இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் இராணுவத்தினர் முழுமையாக ஈடுபட்டுள்ளதுடன்இ பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த சேவையினூடாக பயன் பெற்றுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X