2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அழகுக்கலை பயிற்சி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 26 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

பெண்களின் சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  அரசடித்தீவு சக்தி மகளிர்  இல்லத்தில் மூன்று மாதகால அழகுக்கலை பயிற்சிநெறி  நேற்று செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸிலாந்து நாட்டின் நிதியுதவியுடனும் மட்டக்களப்பு ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன்  நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் இந்தப் பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பயிற்சிநெறியில் 25 பெண்கள் கலந்துகொண்டுள்ளனர்.  இப்பயிற்சிநெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் சுவிஸ் நாட்டு ஸ்டாசொலிடார்டி அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஆதிரியன், அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் ரீ.தியாகராஜா, அழகுக்கலை பயிற்றுநர் வி.சித்ரா, ஸ்டா அமைப்பின் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X