2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொக்கட்டிச்சோலையில் இறந்த யானை மீட்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 26 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்;சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40ஆம் வட்டையில்  இறந்த கொம்பன் யானையொன்றை  மீட்டுள்ளதாக  கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

யானையொன்று  இறந்து காணப்படுவதாக புதன்கிழமை (26) அதிகாலை  பொலிஸாருக்கு கிராமவாசிகள் தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, வனவிலங்கு அதிகாரிகளுடன் சென்று இறந்த  யானையை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இறந்த யானையில்  தந்தம் வெளித் தெரிகின்றது. மின்சாரக் கம்பியில்  அகப்பட்டு இந்த யானை இறந்திருக்கலாமென்று கிராமவாசிகள்  தெரிவிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

இருப்பினும், இந்த யானை எவ்வாறு இறந்தது என்பது தொடர்பில் விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X