2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முத்திரை வரியை இலகுவாக பெற்றுக்கொள்வது தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 27 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்கள், முத்திரை வரியை இலகுவாக பெற்றுக்கொள்வது தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில்; வியாழக்கிழமை (27) நடைபெற்றது.

ஆசியா மன்றத்தின் நிதி அனுசரணையுடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால், மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் ஆசியா மன்றத்தின் இணைப்பு அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் நெறிப்படுத்தலில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருமான யு.எல்.ஏ.அஸீஸ், மாகாண இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹீர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் உட்பட அதிகாரிகள், கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்கள் முத்திரை தீர்வையை (முத்திரை வரியை) பெற்றுக்கொள்வதிலுள்ள தாமதங்கள், விரைவாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைள், அது தொடர்பான அறிவூட்டல்கள் இந்த செயலமர்வின்போது விளக்கிக் கூறப்பட்டதாக ஆசிய மன்றத்தின் இணைப்பு அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X