2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 28 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெவித்தனர்.

கொல்லநுலைக் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான பாலிப்போடி இராசதுரை (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது கால்நடைகளை பார்ப்பதற்காக கண்டியனாறு பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை (27) சென்றபோதே, இவர் இந்த அசம்பாவிதத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுணதீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X