2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்க்கட்சிகளால் இல்லாமல் செய்யமுடியாது'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 28 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை  ஒருபோதும் உடைக்கமுடியாது என்பதை வரவு -செலவுத்திட்ட வாக்கெடுப்பு நிரூபித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்னும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டுச்சென்றாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்க்கட்சிகளால் இல்லாமல் செய்யமுடியாது எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருதயபுரத்தில் பல்தேவைக் கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை (27)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.ஜதிஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடு செய்த பத்து இலட்சம் ரூபாய் செலவில் இந்த பல்தேவைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக, ஒன்றுகூடுவதற்கான மண்டபம் இல்லாமையால் பெரும் கஷ்;டங்களை எதிர்நோக்கிவந்தனர். இந்த பல்தேவைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இங்கு குடிநீர் திட்டத்தையும் மாகாணசபை உறுப்பினர் ஆரம்பித்துவைத்ததுடன், மரநடுகை திட்டத்தையும் ஆரம்பித்துவைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X